ஐபிஎல் 2021: பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?
ஐபிஎல் தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே குவித்தது. பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சிறப்பாக விளையாடி 17.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 153 ரன்கள் குவித்த 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணி சார்பாக பாராத் 44 ரன்களும், மேக்ஸ்வெல் ஆட்டமிழக்காமல் 30 பந்துகளில் 50 ரன்கள் குவித்து அசத்தினார்கள்.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் பட்டியலின் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இதில் எதாவது ஒரு போட்டியில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
மறுபுறம் ராஜஸ்தான் அணி இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேடும் -0.468 என்று மிக மோசமாக உள்ளது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ராஜஸ்தான் அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மிகப் பெரியளவில் வென்றால் மட்டுமே அடுத்துச் சுற்று குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியும். இது மட்டுமின்றி பிற ஆட்டத்தின் முடிவுகளும் ராஜஸ்தான் அணிக்குச் சாதகமாக அமைய வேண்டும். அப்போது தான் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணியால் செல்ல முடியும்.