நாங்கள் இந்த சீசனில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம் - சஞ்சு சாம்சன்!

Updated: Wed, May 21 2025 11:56 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டெவான் கான்வே, உர்வில் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, விளையாடிய ஆயூஷ் மாத்ரே 43 ரன்களையும், டெவால்ட் பிரீவிஸ் 42 ரன்களையும், ஷிவம் தூபே 39 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது.

பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கியா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களையும், வைபவ் சூர்யவன்ஷி 57 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 41 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 17.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இந்நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய சஞ்சு சாம்சன், “இந்த போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. உண்மையைக் கூறவேண்டும் எனில், இப்போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து ஸ்கோர் எடுக்க வேண்டும் என்றும் நினைத்தோம். ஆனால் இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து எங்கள் பலவீனத்தை மறைக்க வேண்டாம் என்று முடிவு செய்தேன். அதன் காரணமாகவே இப்போட்டியில் எங்களால் சேஸிங் செய்ய முடியும் என்பதை கட்ட முதலில் பந்துவீச முடிவுசெய்தேன். 

ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் இல்லாததால் நாங்கள் இளம் பந்துவீச்சாளர்களைக் கொண்டு இப்போட்டியை எதிர்கொண்டோம். ஆனால் அவர்கள் காட்டிய செயல்திறனும், திட்டமிடலும் பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அவர்கள் மிகவும் இளமையானவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரியவர்கள். மேலும் அணியில் உள்ள குறைகளை தீர்க்க நிறைய வேலைகள் நடந்து வருகின்றன.

ஆகாஷ் மத்வால் கடந்த நான்கு ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். ஷேன் பாண்ட் அவருடன் நெருக்கமாக பணியாற்றி வருகிறார். ராகுல் டிராவிட் மற்றும் மற்றவர்கள் அவர் எவ்வளவு கடினமாக உழைத்திருக்கிறார் என்பதைப் பார்த்திருக்கிறார்கள். நாங்கள் அனைவரும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் பவர்பிளேவில் செயல்படும் விதத்தை பார்க்கும் போது, அணிகளின் தரத்தில் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் வெற்றி தோல்விகளில் பிழையின் அளவு மிகவும் குறைவு.

Also Read: LIVE Cricket Score

நாம் ஓய்வெடுத்து சரியான மதிப்பாய்வு செய்ய வேண்டும். நிச்சயமாக நாங்கள் இந்த சீசனில் சிறப்பாகச் செய்திருக்கலாம். இது அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல. நாம் சில தவறுகளைச் செய்துள்ளோம். அடுத்த சீசனில் நாம் சிறந்த மனநிலையுடன் திரும்பி வர வேண்டும். அதேபோல் வைபவ் சூர்யவன்ஷியை பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அவர் அடித்த சதம் மிகவும் அருமை. இவ்வளவு இளம் வயதிலேயே அவருக்கு விளையாட்டு விழிப்புணர்வு இருப்பது பாராட்டுக்குரியது” என்று கூறிவுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை