இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர் சூர்யவன்ஷி - அபினவ் முகுந்த்!

Updated: Wed, May 21 2025 13:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரை வெற்றியுடன் முடித்துள்ளது. 

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் செயல்பாடுகள் பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஏனெனில் இத்தொடரில் விளையாடிய 14 போட்டிகளில் 4 வெற்றி மற்றும் 10 தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் 9ஆம் இடத்தை பிடித்து தொடரை நிறைவு செய்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த அணி இந்த சீசனில் 10 போட்டிகளில் சேஸிங் செய்து அதில் 8 முறை தோல்வியைத் தழுவியது. குறிப்பாக கடைசி ஓவர் வரை சென்றும் இலக்கை எட்ட முடியாததே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

மேற்கொண்டு அணியில் டாப் ஆர்டர் வீரர்களை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதும், பந்துவீச்சாளர்கள் ரன்களைக் கட்டுப்படுத்த தவறியதும், சஞ்சு சாம்சனின் காயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை அந்த அணி சந்தித்திருந்தது. இருப்பினும் அணிக்கு ஆறுதலளிக்கும் விதமாக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷில் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அணியின் எதிர்காலம் எனும் அளவிற்கு தனது ஆட்டத்தை நிரூபித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய சூர்யவன்ஷி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உள்பட 252 ரன்களைச் சேர்த்துள்ளார். மேலும் அவரது ஸ்டிரைக் ரெட் 206ஆக இருக்கும் நிலையில், இதில் 26 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். இதன்மூலம் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவரைச் சேர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழத்தொடங்கியுள்ளன. இருப்பினும் அவருக்கு இவ்வளவு விரைவாக வாய்ப்பு வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இந்நியில் வைவப் சூர்யவன்ஷி குறித்து பேசிய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த், “சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் வைபவ் சூர்யவன்ஷில் பவர்பிளேயில் அதிகம் பந்துகளை தூக்கி அடிக்க முயற்சிக்காமல் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் சுழற்பந்து வீச்சுக்கு எதிரான அவரது ஆட்டம் குறித்து சில கேள்விகள் இருந்தன, இன்று அவர் மிகக் குறைந்த பந்துகளை - பவர்பிளேயில் மூன்று அல்லது நான்கு - எடுத்த போதிலும், அதன் பிறகு வேகத்தை அதிகரிக்க முடிந்தது என்பதை வெளிப்படுத்தினார்.

Also Read: LIVE Cricket Score

பின்னர் அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்து நூர் மற்றும் ஜடேஜாவை எதிர்கொண்ட் விதம், அவரது அற்புதமான இன்னிங்ஸ் இது என்று நினைத்தேன். அவர் பந்தை அடிக்கும் ஒவ்வொரு முறையும், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். ஏனெனில் அவை சிறிய சிக்ஸர்கள் அல்ல - இந்த சிறுவன் 14 வயதில் 80–90 மீட்டர் சிக்ஸர்களை அடிக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கான வீரர்களில் இந்த சிறுவனும் ஒருவன் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை