இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது - சஞ்சு சாம்சன்!
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய 8ஆவது வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 17 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் உறுதிசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஹர்பிரீத் பிரார் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில், அனுபவ வீரர்கள் சரியாக செயல்படாததே தோல்விக்கு காரணம் என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சஞ்சு சாம்சன், “இப்போட்டியில் நாங்கள் மிகவும் சிறப்பாகத் தொடங்கினோம், பவர்பிளேயில் 90 ரன்கள் எடுத்திருந்த தொடக்க வீரர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியவில்லை. ஆனால் பவர்பிளேயில் நாங்கள் பெற்ற வேகத்தை எங்களால் தொடர முடியவில்லை. மேலும் இன்றைய போட்டிக்கான இலக்கு எங்களுக்கு எட்டக்கூடிய ஒன்றாகவே இருந்தது. மேலும் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எதிர்பர்ததை விட பேட்டிங் செய்ய சற்று கடினமாக இருந்தது.
இருப்பினும் எங்களிடம் இருந்த பவர்-ஹிட்டர்கள் மூலம் இது துரத்தக்கூடிய ஸ்கோராவே இருந்தது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் தீர்மானிப்பது சற்று கடினம், நாம் வேலையை முடிக்க வேண்டும். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் பொறுப்பேற்று தங்கள் வேலையைச் செய்ய வேண்டும். வரவிருக்கும் சீசனில் நிச்சயமாக நிறைய முன்னேற வேண்டும். அதனால் அடுத்த போட்டியில் நாங்கள் அதிகம் முயற்சி செய்யவதற்கு ப்திலாக, ஆட்டத்தை வெல்ல முன்னிரிமை தர வேண்டும்” என்று கூறிவுள்ளார்.
இப்போட்டி குறித்து பேசினால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், நெஹால் வதேரா அதிரடியாக விளையாடி 70 ரன்களையும், இறுதிவரை களத்தில் இருந்த ஷஷாங்க் சிங் 59 ரன்களையும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்களைச் சேர்த்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Also Read: LIVE Cricket Score
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 53 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்களையும் வைபவ் சூர்யவன்ஷி 40 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.