ஐபிஎல் 2025: பயிற்சியில் கவனத்தை ஈர்த்த லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் - காணொளி!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ,ராஜஸ்தான் ராயல்ஸ் ம்ற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மீதமுள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்காக கடுமையாக போராடி வருகின்றன.
இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளின் காரணமாக பிளே ஆஃப் சுற்று வாய்ப்பையும் இழந்துள்ளது. அந்த அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி 9 தோல்விகள் என 6 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடரானது ஒரு வார காலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதனையடுத்து அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் எஞ்சிய போட்டிகளுக்காக தயாராகி வருகிறது. மேலும் எஞ்சியுள்ள போட்டிகளில் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிதீஷ் ரானா காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியதை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் இளம் வீரர் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ் ஒப்பந்தமாகிவுள்ளார். இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் பிரிட்டோரியஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் லெவனில் இடம்பிடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன.
தற்போது ராஜஸ்தான் அணியில் இணைந்துள்ள பிரிட்டோரியஸ் தனது பயிற்சியை தொடங்கிவுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் பயிற்சியின் போதே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், தனது முதல் பயிற்சி அமர்விலேயே கேப்டன் சஞ்சு சாம்சனை மிகவும் கவர்ந்துள்ளார். மேலும் பிரிட்டோரியஸ் பயிற்சி மேற்கொண்டு வரும் காணொளியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெளியிட்டுள்ள நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது.
முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் நடந்து முடிந்த எஸ்ஏ20 லீக் தொடரில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பிரிட்டோரியஸ் 12 போட்டிகளில் 397 ரன்களைக் குவித்தார். மேற்கொண்டு 33 டி20 போட்டிகளில் விளையாடிவுள்ள பிரிட்டோரியஸ் 911 ரன்களைக் குவித்துள்ளார். இதில் அவரது ஸ்டிரைக் ரேட் 166 இருந்துள்ளது. இதனால் பிரிட்டோரியஸின் வருகை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மேலும் பலத்தை கூட்டியுள்ளதாக பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், சந்தீப் சர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்ஷனா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேய சிங், லுஹான் ட்ரே பிரிட்டோரியஸ்*, துஷார் தேஷ்பாண்டே, சுபம் துபே, யுத்வீர் சரக், ஃபசல்ஹக் ஃபரூக்கி, வைபவ் சூர்யவன்ஷி, குவேனா மபாகா, குணால் ரத்தோர், அசோக் சர்மா.