ஐபிஎல் 2021: பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்ய 4 அணிகளிடையே கடும் போட்டி!

Updated: Sat, Oct 02 2021 11:40 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கேகேஆர் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (9 வெற்றி), டெல்லி கேப்பிடல்ஸ் (8 வெற்றி) அணிகள் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளன. ஆர்.சி.பி. 7 வெற்றிகள் மூலம் 3ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் மூன்று போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். இல்லையென்றால் ரன்ரேட் முறையில் தகுதி பெறும்.

ஆனால் 4ஆவது அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் 12 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் 11 போட்டியில் விளையாடி 5 வெற்றியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 11 போட்டியில் விளையாடி 4 வெற்றியும் பெற்றுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று சென்னைக்கு எதிராக விளையாடுகிறது. இதில் தோல்வியடைந்தால் பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும். மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் ரன்-ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்பு உண்டு.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

கொல்கத்தா, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அடுத்த இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். ஒன்றில் தோற்றால் கூட வாய்ப்பை இழக்கும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 3 போட்டிகள் உள்ளன. இரண்டில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அடிப்படையில் தகுதி பெற வாய்ப்புள்ளது. மூன்றிலும் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றை உறுதி செய்யும். இதனால் நான்கு அணிகள் இடையே ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை