ஐபிஎல் 2021: சஞ்சு சாம்சனுக்கு 24 லட்சம் அபராதம்!

Updated: Sat, Sep 25 2021 22:30 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் பந்துவீச திக நேரம் எடுத்துக்கொண்டதால், அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐபிஎல் நிர்வாக குழு அறிவித்துள்ளது. மேலும் அணியில் விளையாடிய வீரர்களுக்கு தலா 6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்லோ ஓவர் ரேட் குற்றங்கள் தொடர்பான ஐபிஎல் நடத்தை விதிமுறையின் கீழ் இந்த சீசனின் இரண்டாவது குற்றம் என்பதால், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ .24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் அணியில் விளையாடிய மீதமுள்ள வீரர்களுக்கும் தலா ரூ .6 லட்சம் அல்லது அவர்களின் தனிப்பட்ட போட்டி கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

முன்னதாக பஞ்சாப் அணியின் இன்னிங்ஸில் 20 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சு சாம்சனுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை