ஐபிஎல் 2021: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த ஆர்சிபி!

Updated: Wed, Sep 29 2021 23:06 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்களைச் சேர்த்தார். ஆர்சிபி அணி தரப்பில் அர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்கு விராட் கோலி - தேவ்தத் படிக்கல் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் கோலி 25 ரன்னிலும் தேவ்தத் படிக்கல் 22 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 

பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரீகர் பரத் - கிளென் மேக்ஸ்வெல் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. இதில் ஸ்ரீகர் பரத் 44 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்து அணியை வெற்றிபெறச் செய்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதனால் 17.1 ஓவர்களிலேயே ஆர்சிபி அணி இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 14 புள்ளிகளைப் பெற்று நடப்பு சீசன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பைத் தக்கவைத்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை