இனி வரும் போட்டியில் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் செயல்படுவோம் - சஞ்சு சாம்சன்!

Updated: Thu, Sep 30 2021 14:44 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 43ஆவது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது லீவிஸ் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரது அதிரடியாக ஆட்டம் காரணமாக சிறப்பான தொடக்கத்தை பெற்றது. 

ஆனால் பின்னர் வந்த யாரும் பெரிய அளவு ரன் குவிக்காததால் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் அணி 149 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில், “நாங்கள் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை பெற்றோம். எங்களது தொடக்க வீரர்கள் மிகவும் அருமையாக விளையாடி அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.

ஆனால் நாங்கள் அதனை முன்கொண்டு செல்ல தவறிவிட்டோம். எங்கள் அணியின் மிடில் ஆர்டரில் இன்னும் பலம் தேவை. கடந்த ஒருவாரம் எங்களுக்கு மிகவும் கடினமாக சென்றது. நாங்கள் நல்ல போட்டிகளிலும் விளையாடியிருந்தாலும் வெற்றி எங்கள் பக்கம் கிடைக்கவில்லை. இந்த போட்டியில் மைதானம் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாட முடியாமல் போனது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இருப்பினும் எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் செயல்பட்ட விதம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இனிமேல் எங்களிடம் தோற்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே இனிவரும் போட்டிகளில் நாங்கள் நிச்சயம் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் விளையாடுவோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை