ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய கான்வே, கெய்க்வாட்; டெல்லிக்கு 209 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 55ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணிக்கு டேவன் கான்வே - ருதுராஜ் கெய்க்வாட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவன் கான்வே தொடர்ச்சியாக தனது மூன்றாவது அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கெய்க்வாட் 41 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் கான்வேவுடன் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். மறுமுனையில் சதத்தை நெருங்கிக்கொண்டிருந்த டேவன் கான்வே 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து ஷிவம் தூபேவும் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் சந்தித்த முதல் பந்தை தடுத்து ஆடினார். ஆனால் அதன்பின் இரண்டாவது பந்தை சிக்சருக்கும், மூன்றாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசி மைதானத்தை அளறவைத்தார்.
ஆனால் மறுமுனையில் மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, உத்தப்பா என அனைவரும் அடிக்க முயன்று விக்கெட்டை இழந்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்களைச் சேர்த்தது. சிஎஸ்கே அணியில் எம் எஸ் தோனி 21 ரன்களுடன் களத்தில் இருந்தார்.