ஐபிஎல் 2022 இறுதிப்போட்டி: குஜராத் அணியின் ஆட்டத்தின் போக்கை மாற்றும் நான்கு வீரர்கள்!

Updated: Sun, May 29 2022 14:55 IST
IPL 2022 Final – 4 Key Players for Gujarat can change the result vs RR (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் களமிறங்கும் குஜராத் அணி முதல் சீசனே சாதிக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. நடப்பு சீசனில் அதிக வெற்றி பெற்றுள்ள குஜராத் அணி, இந்த சீசனில் ராஜஸ்தான் அணியுடன் தோற்றதே இல்லை.

இந்தப் போட்டியில் குஜராத் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகும் வீரர்கள் பட்டியல் குறித்து தற்போது காணலாம்.

குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்க கூடிய ஹர்திக் பாண்டியா , இன்றைய ஆடடத்தில் ஆல் ரவுண்டராக ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. லீக் சுற்றில் ராஜஸ்தானுக்கு எதிராக பேட்டிங்கில் 87 ரன்களும் பந்துவீச்சில் 1 விக்கெட்டுக்கு 18 ரன்களும் விட்டு கொடுத்துள்ளார். குவாலிபையர் 1 ஆட்டத்தில் கூட இவர் அமைத்த பார்ட்னர்ஷிப் தான் கதையையே மாற்றியது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட போது ஹாட்ரிக் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தவர் டேவிட் மில்லர். நடப்பு சீசனில் 400 ரன்களுக்கு மேல் அடித்துள்ள மில்லர், இன்றைய ஆட்டத்தில் ராயல்ஸ் அணிக்கு கில்லராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. டேவிட் மில்லரின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே ராஜஸ்தானுக்கு வெற்றி கிடைக்கும்.

குஜராத் அணி வீரர் முகமது ஷமி நடப்பு சீசனில பவர்பிளேவில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஷமி குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டுகள் எடுத்திருக்கும் போட்டிகளில் 12க்கு 11 முறை குஜராத் அணி வென்று இருக்கிறது.இதனால் இன்றைய ஆட்டத்தில் பவர் பிளேவில் நாக் அவுட் பஞ்ச் ஷமி தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றால் அதற்கு முக்கிய காரணமாக ரஷித் கானாக தான் இருப்பார். பட்லரை இதுவரை ஐபிஎல் தொடரில் 3 மறை ரஷித் கான் வீழ்த்தி இருக்கிறார். குவாலிபையர் 1 போட்டியில் கூட ரஷித் கான், அதிக ரன்களை விட்டுத் தராமல் கட்டுப்படுத்தினார். அதே போல் பந்துவீசினால் கூட 90 சதவீதம் குஜராத் வெற்றி உறுதி. மேலும் பேட்டிங் இறுதியிலும் அதிரடியாக ஆடி ரஷித் ரன் குவித்து வருகிறார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை