ஐபிஎல் 2022: உடற்தகுதியை நிரூபித்த ஹர்திக் பாண்டியா!

Updated: Wed, Mar 16 2022 20:27 IST
Image Source: Google

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாட்ணடியா கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பெரும்பாலான போட்டியில் விளையாடவில்லை. ஆனால் அவர் முழு உடல் தகுதியுடன் இருப்பதாகவும், அவர் பயிற்சியின் போது பந்துவீசி வருவதாகவும் மும்பை இந்தியன்ஸ் அணி பொய் சொன்னது.

இதனை நம்பி , ஹர்திக் பாண்டியாவை உலக கோப்பை அணியில் பிசிசிஐ சேர்த்தது. ஆனால் ஹர்திக் பாண்டியா காலை வாரினார். இதனால் பிசிசிஐ-யின் கோபத்திற்கு ஹர்திக் பாண்டியா ஆளாகினார். இதனால் ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். இதனால் தம்மை எந்த தொடரிலும் தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறினார்.

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். இதனால் பரோடாவில் பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றார். இந்த நிலையில், உடல் தகுதியை நிரூபித்தால் மட்டுமே ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி என்று பிசிசிஐ கூறியது. இதனால் பாண்டியாவும் பெங்களூரு சென்றார்.

ஆனால், அங்கு தான் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஒரு செக் வைத்தது. அதன் படி உடல் தகுதியை நிரூபிக்க பேட்டிங் மற்றும் யோ யோ டெஸ்டில் வென்றால் போதும். ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு ஆல் ரவுண்டர் என்பதால், வலைப் பயிற்சியில் தொடர்ந்து 10 ஓவர் வீச வேண்டும். பேட்டிங் பயிற்சி மற்றும் யோ யோ டெஸ்டில் வெற்றி என்று மூன்றிலும் வென்றால் மட்டுமே ஐபிஎல் போட்டிக்கு அனுமதி என்று கூறிவிட்டது.

ஏற்கனவே குஜராத் அணிக்கான ஐபிஎல் பயிற்சி முகாமில் ஹர்திக் பாண்டியா தொடர்ந்து 2 மணி நேரம் வரை பந்துவீசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும் அவர் பழைய மாதிரி இன்னும் பந்துவீசவில்லை. 75 சதவீதம் மட்டும் தான் தேறியுள்ளார் . இந்த தகவல் உடல்தகுதி சோதனையில் பிசிசிஐக்கு தெரிய வந்தால் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது.

இந்நிலையில் ஹர்திக் பாண்டியா, என்சிஏவின் பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் யோ-யோ டெஸ்ட் என அனைத்திலும் போதுமான புள்ளிகளைப் பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பந்துவீச்சில் சராசரியாக 135 கி.மீ வேகத்திலும், பேட்டிங்கில் 17 ரன்களையும் சேர்த்துள்ளார். 

இதன்மூலம் அவரது உடற்தகுதியை நிரூபித்துள்ளதால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் இந்திய அணியிலும் கூடிய விரைவில் இடம்பிடிப்பார் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை