என் வாழ்கையில் மிகவும் அழகான நாட்களில் நான் உள்ளேன் - விராட் கோலி
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் இன்று ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன. இதுவரை 14 புள்ளிகளை பெற்றுள்ள ஆர்சிபி அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டயாத்தில் இருக்கிறது.
இத்தகைய முக்கியமான போட்டியில் விராட் கோலி கைக்கொடுத்து உதவுவாரா என்பது தான் தற்போது பெரும் குழப்பமாக இருக்கிறது. நடப்பு சீசனில் இதுவரை 236 ரன்களை அடித்துள்ள கோலி, மோசமான பேட்டிங் ஃபார்மில் இருந்து வருகிறார். எனவெ இன்று என்ன செய்யப்போகிறாரோ என்ற கவலையில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அதுகுறித்து கோலியே விளக்கமளித்துள்ளார். அதில், “என் வாழ்கையில் மிகவும் அழகான நாட்களில் நான் உள்ளேன். பழைய நாட்களுக்கும் திரும்ப விரும்புகிறேன். எனது அனுபவங்கள் தான் எனக்கு பயத்தை கொடுக்கிறது. என்னை பற்றி உலகமே பெரியளவில் பேசி வருகின்றனர். அதனை கையாள்வது சிரமமாக உள்ளது.
எனக்கு முன்பை போல ட்ரைவ் ஆட வரவில்லை எனக்கூறுகின்றனர். ஆனால் எனது ட்ரைவ் என்றுமே அழியாது. அப்படி ஒருநாள் ட்ரைவ் என்னைவிட்டு சென்றால், நான் அப்போது கிரிக்கெட்டில் இருந்து விலகியிருப்பேன். தற்போது அணியை பெருமையைப் படுத்த வேண்டும் என்று தான் நினைக்கிறேன். அதனை செய்வேன்” என தெரிவித்துள்ளார்.