ஐபிஎல் 2022: அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷான்; டெல்லிக்கு 178 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பந்துவீச தீர்மானித்து, மும்பையை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதனால் பவர்பிளே முடிவில் அந்த அணி 53 ரன்களைச் சேர்த்தது.
பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 41 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்துவந்த அன்மோல்ப்ரீத் சிங் 8 ரன்களிலும், இளம் அதிரடி வீரர் திலக் வர்மா 22 ரன்களிலும் குல்தீப் யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் கீரன் பொல்லார்ட் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இஷான் கிஷான் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருடன் இணைந்த டிம் டேவிட்டும் அதிரடியில் மிரட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக இஷான் கிஷான் 81 ரன்களையும், ரோஹித் சர்மா 41 ரன்களையும் சேர்த்தனர். டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.