ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; கடைசி ஓவரில் அசத்திய ரஸ்ஸல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 35ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ச் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டிஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டில் டாஸை வென்ற குஜராத் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் 7 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த விருத்திமான் சஹா - கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் சஹா 25 ரன்களில் விக்கெட்டை இழக்க மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு துணையாக டேவிட் மில்லரும் ஒரு சில பவுண்டரிகளை பறக்கவிட்டார்.
பின் 27 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லர், ஷிவம் மாவி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 67 ரன்களில் விக்கெட்டை டிம் சௌதியிடம் விக்கெட்டை இழக்க, அதே ஓவரில் ரஷித் கானும் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.
அதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் ரன் குவிக்க தடுமாறினர். அதிலும் கேகேஆர் அணி தரப்பில் கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை மட்டுமே சேர்த்தது. கொல்கத்தா தரப்பில் ரஸ்ஸல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.