ஐபிஎல் 2022: திரிபாதியின் ஆட்டமே கேகேஆர் தோல்விக்கு காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர்!

Updated: Sat, Apr 16 2022 11:54 IST
IPL 2022: KKR skipper Shreyas Iyer believes his team put 'great effort' against SRH (Image Source: Google)

15ஆவது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 54 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காத ரசல் 49 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கேன் வில்லியம்சன் (17) மற்றும் அபிசேக் சர்மா (3) ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.

இதன்பின் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி – மார்கரம் கூட்டணி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை அசால்டாக சிதறடித்து மளமளவென ரன் குவித்தது. குறிப்பாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் திரிபாதி 37 பந்துகளில் 6 சிக்ஸர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்து கொடுத்தார். மார்கரமும் தன் பங்கிற்கு 36 பந்துகளில் 4 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 68* ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம், 17.5 ஓவரிலேயே இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தநிலையில், ஹைதராபாத் அணியுடனான இந்த தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஸ்ரேயஸ் ஐயர்,ராகுல் திரிபாதியின் பொறுப்பான ஆட்டமே கொல்கத்தா அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.

இது குறித்து ஸ்ரேயஸ் ஐயர் பேசுகையில், “இந்த தோல்வி வேதனையை கொடுத்துள்ளது. 175 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் வெற்றி பெறுவதற்கு போதுமான இலக்கு தான் என நினைத்தேன். ராஉல் த்ரிபாட்டி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டார், அவரது பொறுப்பான ஆட்டம் எங்களிடம் இருந்து வெற்றியை பறித்துவிட்டது. 

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளர்களும் மிக சிறப்பாக செயல்பட்டனர், அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் குறிப்பாக ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களை கடும் நெருக்கடிக்குள் வைத்து கொண்டனர். பேட்டிங்கில் நான் மிக சிறப்பாக செயல்பட்டோம், ஆனால் பந்துவீச்சில் சொதப்பிவிட்டோம்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை