ஐபிஎல் 2022: டி காக், ஹூடா அதிரடியில் 176 ரன்களை குவித்தது லக்னோ!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 53ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் பந்துகளை சந்திக்காமலே ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த குயின்டன் டி காக் - தீபக் ஹூடா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அதிரடியாக விளையடிய டி காக் அரைசதம் கடந்தார்.
தொடர்ந்து அபாரமாக விளையாடிவந்த டி காக் அரைசதத்துடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹூடா 41 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய குர்னால் பாண்டியா 25, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 28 ரன்கள் என தங்களது பங்களிப்பை அளித்தனர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. கேகேஆர் தரப்பில் ஆண்ட்ரே ரஸ்ஸல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.