ஐபிஎல் திருவிழா 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sat, Mar 26 2022 14:38 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இன்று முதல் கோலகலமாக தொடங்குகிறது. நடப்பாண்டு 10 அணிகள் பங்கேற்கும் பிரம்மாண்ட தொடராக நடைபெறவுள்ளது.

இதில் நாளை நடைபெறும் 2ஆவது லீக் ஆட்டத்தில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், அதிரடி வீரர் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் : பிரபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் : மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரிஷப் பந்த் முழுநேர கேப்டனாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்தவுள்ளார். மேலும் கடந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுவரை முன்னேறிய டெல்லி அணி, மீண்டும் முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது.

இதனால் நடப்பு சீசனில் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கவுள்ளது. அணியின் பேட்டிங் ஆர்டரில் பிரித்வி ஷா, டேவிட் வார்னர், டிம் செய்ஃபெர்ட், கே எஸ் பரத், மிட்செல் மார்ஷ் ஆகியோர் இருப்பது அணிக்கு பெரும் பலமாக இருக்கிறது.

அதேசமயம் பந்துவீச்சில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, காகிசோ ரபாடா ஆகியோருடன் அக்ஸர் படேல், சேத்தன் சக்காரியா, ஷர்துல் தாக்கூரும் இருப்பதால் நிச்சயம் எதிரணிக்கு தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையுடன் களமிறங்கும் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 6ஆவது கோப்பையை வெல்ல ஆர்வம் காட்டிவருகிறது.

பேட்டிங்கில் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட் என வலிமையான பேட்டிங்கையும், பும்ரா, முருகன் அஸ்வின், தைமல் மில்ஸ், ரிலே மெரிடித் ஆகியோரும் இருப்பதால் அந்த அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • மும்பை வெற்றி - 16
  • டெல்லி வெற்றி - 14

உத்தேச அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிரித்வி ஷா, டிம் செய்ஃபெர்ட், கேஎஸ் பரத், ரிஷப் பந்த் (கே), சர்ஃப்ராஸ் கான், ரோவ்மன் பாவல், அக்ஸர் படேல், ஷர்துல் தாக்கூர், சேட்டன் சக்காரியா, குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத்.

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷான், திலக் வர்மா, டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், ஃபபியன் ஆலன், சஞ்சய் யாதவ், டேனியல் சாம்ஸ், ஜெய்தேவ் உனாட்கட், முருகன் அஸ்வின், ஜஸ்ப்ரீத் பும்ரா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - இஷான் கிஷான், ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - பிரித்வி ஷா, ரோஹித் சர்மா, டிம் செய்ஃபெர்ட்
  • ஆல்ரவுண்டர்கள் - டிம் டேவிட், கீரன் பொல்லார்ட், அக்ஸர் படேல்
  • பந்துவீச்சாளர்கள் - ஜஸ்ப்ரித் பும்ரா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை