ஐபிஎல் 2022: ஸ்லோ ஓவர் ரேட்; மும்பை இந்தியன்ஸுக்கு அபராதம்!

Updated: Sun, Mar 27 2022 22:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போடியில் அக்ஸர் படேலின் காட்டடி ஆட்டம், லலித் யாதவின் பொறுப்பான பேட்டிங்கால் மும்பை இந்தியன்ஸ் அணியை  4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ் அணி.

முதலில் பேட்செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. 178 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடினமான இலக்கை துரத்திய டெல்லி கேபிடல்ஸ் அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருது 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.

டெல்லி அணியின் பந்துவீச்சுதான் சொத்தையாக இருந்தது என்றால் அதைவிட மோசமாக இருந்தது மும்பை அணியின் பந்துவீச்சு. அதிலும் பும்ரா, சாம்ஸ் தர்மபிரபுகளாக விளங்கினார். டெல்லியின் அணியின் வெற்றிக்கு காரணமாக விளங்கியவர்கள் பும்ரா, சாம்ஸ் என்றால் மிகையில்லை. இருவரும் சேர்ந்து 7.2 ஓவர்கள் வீசி 100 ரன்களை வாரி வழங்கினர். 

ஒரு கட்டத்தில் ஆட்டம் மும்பையின் கையில்தான் இருந்தது. அக்ஸர் படேல், லலித் யாதவ் கூட்டணியைப் பிரித்திருந்தால் ஆட்டம் மும்பை வசம் இருந்திருக்கும் ஆனால், இருவரையும் பிரிக்கமுடியாமல் மும்பை பந்துவீச்சாளர்கள் மகாமட்டமாகப் பந்துவீசினார்கள். 

அதிலும் சாம்ஸ் வீசிய 18ஆவது ஓவர்தான் ஆட்டம்தான் திருப்புமுனையாகும். இந்த ஓவரில் 3 சிக்ஸர், பவுண்டரி என 24 ரன்கள் சேர்த்து ஆட்டத்தை லலித், அக்ஸர் இருவரும் முடிவுக்கு கொண்டு வந்தனர். 

இந்நிலையில் இப்போட்டியில் பந்துவீச அதிகம் நேரம் எடுத்துக்கொண்டதாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை