வலை பயிற்சியில் ரோஹித் சர்மா, விராட் கோலி - வைரலாகும் காணொளி!

Updated: Thu, Oct 16 2025 22:59 IST
Image Source: Google

ஆஸ்திரேலிய அணி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகளை கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஒருநாள் அணியில் சாதாரண வீரர்களாக மட்டுமே இடம் பிடித்துள்ளனர். அதேசமயம் அறிமுக வீரர்கள் நிதீஷ் ரெட்டி, துருவ் ஜூரெல் ஆகியோருக்கும் ஒருநாள் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் பாட் கம்மின்ஸ், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், மிட்செல் மார்ஷ் அணியின் கேப்டனாக தொடர்கின்றார். மேற்கொண்டு ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் ஆடம் ஸாம்பா உள்ளிட்டோர் முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகிய நிலையில், அவர்களுக்கு பதிலாக ஜோஷ் பிலீப் மற்றும் மேத்யூ குஹ்னமென் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவிற்கு சென்றடைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்திய வீரர்கள் பெர்த் கிரிக்கெட் மைதானத்தில்  தங்கள் பயிற்சிகளைத் தொடங்கியுள்ளனர். அதிலும் அணியின் நட்சத்திர வீராங்கனைகள் விராட் கோலி - ரோஹித் சர்மா இருவரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து இருவரும் பயிற்சி மேற்கொள்ளும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய ஒருநாள் அணி: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்ஸர் படேல், கே.எல். ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், ஹர்ஷதீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரல், யஷஸ்வி ஜெய்ஸ்வால். 

Also Read: LIVE Cricket Score

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கனோலி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை