ஐபிஎல் 2022: சன்ரைசர்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அசத்தல் வெற்றி!

Updated: Sun, May 22 2022 23:05 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் இன்று நடந்துவரும் கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிட்டதால் இன்று நடக்கும் போட்டி புள்ளி பட்டியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர் பிரியம் கர்க் 4 ரன்னில் ஆட்டமிழக்க, ராகுல் திரிபாதி 20 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் ஷர்மா அடித்து ஆடி 43ரன்கள் அடித்தார். ஆனால் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். மார்க்ரம் 21 ரன்கள் அடித்தார். 

பின்வரிசையில் வாஷிங்டன் சுந்தர் 25ரன்கள் அடித்து பங்களிப்பு செய்தார். ரொமாரியோ ஷெஃபெர்டு அதிரடியாக ஆடி 15 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் 156 ரன்கள் அடித்து, 157 ரன்கள் என்ற சவாலான இலக்கை பஞ்சாப்கிங்ஸுக்கு நிர்ணயித்தது சன்ரைசர்ஸ்.

இதையடுத்து இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஜானி பேர்ஸ்டோவ் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய ஷாருக் கான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 19 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, அடுத்துவந்த மயங்க் அகர்வால் ஒரு ரன்னுடன் வெளியேறினார்.

மறுமுனையில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகர் தவான் 39 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி சிக்சர் மழை பொழிந்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 15.1 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை