ஐபிஎல் 2022: பேர்ஸ்டோவ் அரைசதம்; ராஜஸ்தானுக்கு 190 டார்கெட்!

Updated: Sat, May 07 2022 17:26 IST
IPL 2022: Punjab Kings finishes off 189 on their 20 overs
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 52ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தனர். இதில் தவான் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ராஜபக்ஷா 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அதன்பின் 57 ரன்களிலும் பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து கேப்டன் மயங்க் அகர்வாலும் 15 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் ஜோடி செர்ந்த லியான் லிவிங்ஸ்டோன் - ஜித்தேஷ் சர்மா இணை இறுதிநேரத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவினர். அதன்பின் 22 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டோன், பிரஷித் கிருஷ்ணா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை சேர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை