ஐபிஎல் 2022: ரபாடா வேகத்தில் வீழ்ந்தது லக்னோ; பஞ்சாப்பிற்கு 154 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 42ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய லக்னோ அணியில் கேப்டன் கேஎல் ராகுல் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த குயிண்டன் டி காக் - தீபக் ஹூடா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக் 46 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் சந்தீப் சர்மாவிடம் விக்கெட்டை இழந்தார். மேலும் போட்டி நடுவர் அவுட் வழங்குவதற்கு முன்னதாக அவரே தமாக களத்தை விட்டு வெளியேறியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
அதனைத் தொடர்ந்து தீபக் ஹூடாவும் 34 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த குர்னால் பாண்டியா, ஆயூஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஜேசன் ஹோல்டர் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இறுதுயில் துஷ்மந்தா சமீரா, மோசின் கான் ஆகியோர் ஒரு சில பவுண்டரிகளை விளாசினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுத்தது.
பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.