ஐபிஎல் 2022: காயம் காரணமாக குல்டர் நைல் விலகல்!

Updated: Wed, Apr 06 2022 17:29 IST
Image Source: Google

ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் நைலை ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. கடந்த வருடம் மும்பை அணியிலும் அதற்கு முன்பு ஆர்சிபி, கேகேஆர், தில்லி ஆகிய அணிகளிலும் அவர் இடம்பெற்றார். 

ஆஸ்திரேலிய அணிக்காக 32 ஒருநாள், 28 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். தற்போது 34 வயது நாதன் கோல்டர் நைல் இந்த வருட ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக விளையாடி 3 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 48 ரன்கள் கொடுத்தார். 

இந்நிலையில் காயம் காரணமாக நாதன் குல்டர் நைல் ஐபிஎல் 2022 போட்டியிலிருந்து விலகுவதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அறிவித்துள்ளது. இதையடுத்து ஆல்ரவுண்டர் ஒருவரை அந்த அணி புதிதாகத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::