ஐபிஎல் 2022: போட்டிக்கு நடுவே காதலை வெளிப்படுத்திய இளம்பெண்!

Updated: Thu, May 05 2022 11:52 IST
Image Source: Google

புனேயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி  20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் சேர்த்து 13 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் 4ஆவது இடத்துக்கு முன்னேறியது. சிஎஸ்கே அணி 10 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் 9ஆவது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேயின் நிலைமையைப் பார்த்தால் இந்த ஆண்டு சீசனில், ப்ளே ஆஃப் சுற்றுக்குச் செல்வது கூட கடினம்தான். முன்னாள் சாம்பியன்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணியினர் இந்த ஆண்டு லீக் சுற்றோடு வெளியேற வேண்டியதிருக்கும்.

ஆர்சிபி அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல். பேட்டிங்கில் சொதப்பினாலும் பந்துவீச்சில் இரு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு துணையாகினார். குறிப்பாக அம்பதி ராயுடு, உத்தப்பா ஆகிய இரு பெரிய விக்கெட்டுகள மேக்ஸ்வெல் சாய்த்தார். தவிர ஹர்சல் படேல் அருமையாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றியை உறுதி செய்தார். ஜடேஜா, மொயின்அலி, பிரிட்டோரியஸ் ஆகிய பேட்ஸ்மேன்களை படேல் வெளியேற்றி வெரறறியை உறுதி செய்தார்.

சேஸிங்கில் சிஎஸ்கே அணி வெல்லுமா, ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் சுருட்டுவார்களா என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் கேலரியில் பரபரப்புடன் போட்டியை பார்த்தனர். பெரும் பரபரபுக்கு மத்தியில் ரசிகர்களை குளிர்விக்கும் வகையில், ஆஹா போடவைக்கும் வகையில் ஒரு காட்சி கேலரியில் நடந்தது.

ஆர்சிபி ஜெர்ஸி அணிந்திருந்த ஒரு இளைஞரிடம் சென்று ஒரு  இளம் பெண், ஒரு அழகிய பரிசை அளித்து தனது காதலை வெளிப்படுத்தினார். அந்த இளம் பெண் முழங்காலிட்டு, தனது கையில் இருந்த மோதிரத்தை அந்த இளைஞரிடம் கொடுத்து என்னைத் திருமணம் செய்கிறாரா எனக் கேட்டார். 

இந்த இளம் பெண்ணின் காதல் விண்ணப்பத்தைப் பார்த்த அந்த இளைஞர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடி, முகம் முழுவதும் புன்னகையால் நிரம்பியது. அதன்பின் அந்த இளம் பெண் தனது காதலனின் விரலில் இந்த மோதிரத்தை அணிவித்து காதலைத் தெரிவித்தார். 

இதைப் பார்த்த ரசிகர்கள் சில நிமிடங்கள் போட்டியை மறந்துவிட்டு கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஒருபக்கம் புள்ளிக்காக ஆர்சிபியும், சிஎஸ்கேயும் கோதாவில் இருந்தபோது இதுபோன்ற ரொமான்ஸ் காட்சி, ரசிகர்களை பரபரப்பிலிருந்து மீட்டது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை