ஐபிஎல் 2022: ஹசரங்கா பந்துவீச்சில் சுருண்டது ஹைதராபாத்!

Updated: Sun, May 08 2022 19:27 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ஆர்சிபி அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்த சீசனில் 3வது முறையாக முதல் பந்தில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார். 2வது விக்கெட்டுக்கு டுப்ளெசிஸூம் ரஜத் பட்டிதாரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். அதிரடியாக ஆடிய பட்டிதார் 38 பந்தில் 48 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். க்ளென் மேக்ஸ்வெல் 24 பந்தில் 33 ரன்கள் அடித்தார். 

ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார் ஃபாஃப் டுப்ளெசிஸ். 19வது ஓவரில் களத்திற்கு வந்த தினேஷ் கார்த்திக் 8 பந்தில்  4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 30 ரன்களை குவித்து மீண்டுமொரு முறை ஆர்சிபிக்காக முடித்து கொடுத்தார். க

டைசி ஓவரின் கடைசி 4 பந்தில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் தினேஷ் கார்த்திக். அவரது அதிரடியால் 20 ஓவரில் 192 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 193 ரன்கள் என்ற கடினமான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது. 
 
அதன்பின் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் ரன் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி - ஐடன் மார்க்ரம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 21 ரன்களில் மார்க்ரம் ஆட்டமிழக்க, அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

ஆனாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வந்த ராகுல் திரிபாதி அரைசதம் கடந்த கையோடு 58 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்னர் களமிறங்கிய வீரர்கள் ஹசரங்காவின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 19.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆர்சிபி தரப்பில் வநிந்து ஹசரங்கா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை