ஐபிஎல் 2022: சாம்சம், ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல்!

Updated: Sat, Mar 26 2022 13:33 IST
Image Source: Twitter

ஐபிஎல் 15வது சீசன் தொடர் இன்று தொடங்குகிறது. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் முதல் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியை எதிர்பார்த்திருந்த ரசிகர்களின் கவனம் திடீரென ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பக்கம் திரும்பியுள்ளது.

ராஜஸ்தான் அணியின் ட்விட்டர் பக்கத்தில், அதன் கேப்டன் சஞ்சு சாம்சன் குறித்த பதிவு நேற்று போடப்பட்டிருந்தது. அதில், சஞ்சு சாம்சனின் புகைப்படத்தை தலைப்பா, கண்ணாடி, காதணி, வாயில் புகையிலை என மோசமான முறையில் எடிட் செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்த ரசிகர்களும் அவரை கிண்டல் செய்து வந்தனர்.

இதனையடுத்து கோபமடைந்த சஞ்சு சாம்சன், ட்விட்டரிலேயே பதிலடி கொடுத்தார். அதில், எனது நண்பர்கள் இதுபோன்ற காரியங்களை செய்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஒரு கிரிக்கெட் அணி நிர்வாகம் பொறுப்புடன் நடந்துக்கொள்ள வேண்டும். இப்படி சிறுபுள்ளைத்தனமாக இருக்கக்கூடாது என கண்டனம் தெரிவித்தார். மேலும் ராஜஸ்தான் அணியின் சமூக வலைதளபக்கங்களை பின் தொடர்வதையும் நிறுத்தினார்.

பதிலடி கொடுத்ததோடு நின்றுவிடாத அவர், ராஜஸ்தான் அணி நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். இதனையடுத்து தற்போது நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அணியின் சமூக வலைதளப்பக்கங்களை கவனித்து வந்த குழுவை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ளது.

ஆனால் ராஜஸ்தான் அணி கடைசியில் ட்விஸ்ட் கொடுத்தது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், அணி வீரர்கள் அஸ்வின், ஜிம்மி நீஷம், பட்லர் மற்றும் பயிற்சியாளர்கள் மலிங்கா, சங்ககாரா என பலரும் இடம்பெற்றிருந்தனர். இறுதியில் அது எல்லாமே விளையாட்டிற்காக செய்யப்பட்டதும், பிராங்க் காணொளி என்றும் தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்களும் கொந்தளித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை