ஐபிஎல் 2022: வில்லியம்சன் அசத்தல்; குஜராத்தை வீழ்த்தியது ஹைதராபாத்!

Updated: Mon, Apr 11 2022 23:20 IST
Image Source: Google

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் டைட்டன்ஸும் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை  தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில் (7) மற்றும் மேத்யூ வேட்  (19) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.  சாய் சுதர்சன் 11 ரன்னிலும், மந்தமாக ஆடிய டேவிட் மில்லர் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

குஜராத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. அதை சமாளித்து அருமையாக பேட்டிங் ஆடினார் ஹர்திக் பாண்டியா. அவருடன் இணைந்து அபினவ் மனோகரும் சிறப்பாக பேட்டிங் ஆடினார். 21 பந்தில் 35 ரன்கள் அடித்து அபினவ் மனோகர் ஆட்டமிழக்க, 42 பந்தில் அரைசதம் அடித்தார் ஹர்திக் பாண்டியா.

ஹர்திக் பாண்டியாவின் பொறுப்பான அரைசதம் மற்றும் அபிநவ் மனோகரின் பொறுப்பான பேட்டிங்கால் 20 ஓவரில் 162 ரன்கள் அடித்தது குஜராத் டைட்டன்ஸ். 163 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது குஜராத் அணி.

இதையடுத்து இலக்கை துரத்திய ஹைத்ராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா - கேப்டன் வில்லியம்சன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 64 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் அரைசதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 42 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார்.

இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில்லியம்சன் அரைசதம் விளாசி அணிக்கு நம்பிக்கையளித்தார். ஆனால் 57 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்சன், ஹர்திக் பாண்டியா வீசிய 17ஆவது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.

இதனால் கடைசி மூன்று ஓவரில்களில் ஹைதராபாத் அணி வெற்றிபெற 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 

இதன்மூலம் 19.1 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பெற்றது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை