ஐபிஎல் 2022: தோனியிடன் ஆட்டோகிராஃப் வாங்கிய ஸ்டெயின்!

Updated: Mon, May 02 2022 11:43 IST
Image Source: Google

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி ருதுராஜ், கான்வே ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 202 ரன்களைச் சேர்த்தது. இதில் ருதுராஜ் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

அதன்பின் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியால் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சிஎஸ்கே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இந்த நிலையில், போட்டி முடிந்ததும் தோனிக்கு ஸ்டெயின் செய்த காரியம், ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ஹைதராபாத் அணியின் பந்துவீச்சுக்கான பயிற்சியாளராக ஸ்டெயின் விளங்குகிறார். ஸ்டெயினின் வருகைக்கு பிறகு புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், நடராஜன், ஜான்சென் ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வந்தனர்.

ஆனால் இத்தகைய பந்துவீச்சையே சிஎஸ்கே அணி பீஸ் பீசாக ஆக்கியது. இதனையடுத்து போட்டி முடிந்ததும் ஸ்டெயின் தன்னுடைய பழைய ஜெர்சியை தோனியிடம் கொண்டு சென்று ஆட்டோகிராப் கேட்டார். இதற்கு தோனியும் நெகிழ்ச்சியுடன் கையெழுத்து போட்டார்.

 

மார்டன் கிரிக்கெட்டில் உலகின் தலைச் சிறந்த பந்துவீச்சாளராக விளங்கியவர் ஸ்டெயின். முழு உடல் தகுதியுடன் இருந்த போது ஐபிஎல் தொடரிலும் கலக்கியவர். ஆனால் அப்படி பட்ட ஸ்டெயினே தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கியது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::