ஐபிஎல் 2022: மும்பை இந்திய்ன்ஸுக்கு 194 ரன்கள் டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 65ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ப்ரியம் கார்க் - ராகுல் த்ரிபாதி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ப்ரியம் கார்க் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரமந்தீப் சிங் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் நிதானமாக விளையாட, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ராகுல் த்ரிபாதி அரைசதம் கடந்து அசத்தினார்.
அதன்பின் நிக்கோலஸ் பூரான் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, 76 ரன்களுடன் விளையாடி வந்த ராகுல் த்ரிபாதி ரமந்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஐடன் மார்க்ரமும் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ரமந்தீப் சிங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.