நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும் - பாட் கம்மின்ஸ்!

Updated: Mon, May 26 2025 12:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்களையும், அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும், அபிஷேக் சர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்களைக் குவித்தது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் மனீஷ் பாண்டே 37 ரன்களையும், ஹர்ஷித் ரானா 34 ரன்களையும், சுனில் நரைன் 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. 

இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய எஸ்ஆர்எச் கேப்டன் பாட் கம்மின்ஸ், “எங்களுக்கு கிடைத்த அற்புதமான முடிவு. சீசனின் கடைசி சில ஆட்டங்களில், நிறைய விஷயங்கள் நன்றாக முடிந்தன, அந்த மாதிரியான பேட்டிங்கைப் பார்க்க பயமாக இருந்தது. எங்களிடம் உள்ள வீரர்களின் திறமையைக் கொண்டு, நாங்கள் முன்பு செய்ததை விட மோசமாக விளையாட முடியாது. எங்களிடம் உள்ள வீரர்களுடன், நாங்கள் இறுதிப் போட்டிக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் இந்த ஆண்டு நாங்கள் அதை செய்யவில்லை.

Also Read: LIVE Cricket Score

இங்கே இருப்பது போல் நாங்கள் விக்கெட்டுகளைப் பெறுகிறோம், நாங்கள் அதிகபட்சமாக 250-260 ரன்களைப் பெற வேண்டும், மேலும் நாங்கள் கிராஃப்ட் செய்து 170 ரன்களைப் பெற வேண்டிய இடங்களில் அதைச் செய்ய முடியவில்லை. எங்களிடம் உள்ள அணியில் மிகவும் மகிழ்ச்சி, சில வீரர்கள் காயங்களுடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். அதன் காரணமாக இத்தொடரில் நாங்கள் 20 வீரர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை