சதமடித்து சாதனைகள் படைத்த ஹென்ரிச் கிளாசென்!
டெல்லி அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ச் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.
இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரையும் வெற்றியுடன் முடித்துள்ளது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசென் ஆட்டநாயகன் விருதை வென்று அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த மூன்றாவது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார். முன்னதாக கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹென்ரிச் கிளாசென் அவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.
அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ஹென்ரிச் கிளாசென், யூசுஃப் பதான் ஆகியோர் கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்
- 30 பந்துகள் – கிறிஸ் கெய்ல் vs புனே வாரியர்ஸ் இந்தியா, 2013
- 35 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs குஜராத் டைட்டன்ஸ், 2025
- 37 பந்துகள் – ஹென்ரிச் கிளாசென் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025*
- 37 பந்துகள் – யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ், 2010
இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். முன்னதாக அபிஷெக் சர்மா 39 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 43 பந்துகளில் சதமடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர்கள்
- 37 - ஹென்ரிச் கிளாசென் vs கேகேஆர், 2025*
- 39 - அபிஷேக் சர்மா vs பஞ்சாப் கிங்ஸ், 2025
- 43 - டேவிட் வார்னர் vs கேகேஆர், 2017
- 45 - இஷான் கிஷன் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 2025
Also Read: LIVE Cricket Score
இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 278 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியானது 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.