ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை - அஜிங்கியா ரஹானே!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 105 ரன்களையும், அணியின் தொடக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 76 ரன்களையும், அபிஷேக் சர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 278 ரன்களைக் குவித்தது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியில் மனீஷ் பாண்டே 37 ரன்களையும், ஹர்ஷித் ரானா 34 ரன்களையும், சுனில் நரைன் 31 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்க தவறியதால் 18.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய கேகேஆர் அணி கேப்டன் அஜிங்கியா ரஹானே, “சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். நாங்கள் எங்களுடைய பந்துவீச்சில் சில தவறுகளைச் செய்துவிட்டோம். இருப்பினும் அவர்கள் பேட்டிங் செய்த விதம் காரணமாக சில நல்ல பந்துகளையும் கூட அவர்களால் பவுண்டரிக்கு அடிக்க முடிந்தது. இப்போட்டிக்கான அனைத்து பெருமையையும் எதிரணி பேட்டர்களையே சேரும்.
நாங்கள் ஸ்லோவர், வைடர் பால்ஸ், வைட் ஸ்லோவர் பந்துகளை அதிகம் வீச வேண்டும் என்று ஆலோசித்தோல், ஆனால் சில சமயங்களில் பந்துவீச்சாளர்கள் தங்கள் திட்டங்களை சரியாக செய்யாத போது ஹென்ரிச் கிளாசென் போன்ற பேட்டர்காள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் ஒரு பந்துவீச்சு யூனிட்டாக இன்னிங்ஸ் முழுவது நிறைய தவறுகளை செய்துள்ளோம். மேலும் இந்த சீசன் முழுவதும் எங்களுக்கு வெற்றிபெறும் தருணங்கள் இருந்தன.
அதில் நாங்காள் வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தன, 2-3 நெருக்கமான ஆட்டங்கள் இருந்தன, ஒரு அணியாக, ஒரு யூனிட்டாக நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை என்று நினைக்கிறேன். அதைத் தவிர, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், எங்களால் முடிந்ததைச் செய்தோம். இது போன்ற ஒரு வடிவத்தில், நீங்கள் ஒவ்வொரு முறையும் மாற்றப்பட வேண்டும். இந்த வடிவம் மிகவும் கடினமானது, இந்த ஐபிஎல் மிகவும் கடினமானது.
Also Read: LIVE Cricket Score
ஒரு அணியாக, எங்களுக்கு அந்த வாய்ப்புகள் இருந்தன, எங்களுக்கு அந்த தருணங்கள் இருந்தன, நாங்கள் அட்டவணையில் முதலிடத்திலோ அல்லது இரண்டாவதாகவோ இருந்திருப்போம். ஆனால், வருத்தப்பட வேண்டாம், இந்த சீசனில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அனைத்து வீரர்களும் தங்கள் சிறந்ததை முயற்சித்தனர், தங்கள் சிறந்ததைக் கொடுத்தனர். அடுத்த ஆண்டு நாங்கள் மிகவும் வலுவாக திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.