ஐபிஎல் 2022: முழு அட்டவணை வெளியீடு!

Updated: Sun, Mar 06 2022 18:33 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் களமிறங்குவதால் 10 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றன. 

10 அணிகள் ஆடவுள்ளதால் இந்த சீசனில் 10 அணிகளும் தலா 5 அணிகள் அடங்கிய இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அதன்படி க்ரூப் ஏ-வில் மும்பை இந்தியன்ஸ், கேகேஆர், டெல்லி கேபிடள்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய 5 அணிகளும், க்ரூப் பி-யில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 5 அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒரு பிரிவில் இருக்கும் ஒவ்வொரு அணியும் மற்ற 4 அணிகளுடன் தலா 2 முறையும், மற்றொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளுடன் ஒருமுறையும், ஒரேயொரு அணியுடன் மட்டும் 2 முறையும் மோதும் வகையில் போட்டி அட்டவணை உருவாக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 70 லீக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், இந்த சீசனுக்கான முழு போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 26ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் சிஎஸ்கேவும் கேகேஆரும் மோதுகின்றன. 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 2 போட்டிகள் நடக்கவுள்ளன. வரும் 26ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரின் 70 லீக் போட்டிகளும் 65 நாட்கள் நடக்கவுள்ளன.

Click here to see the full Tata IPL 2022 Schedule
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை