மீண்டும் டிஆர்எஸில் அசத்திய தோனி; ரசிகர்கள் உற்சாகம்!

Updated: Sat, Apr 08 2023 22:10 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டியாக ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரின் 1000ஆவது போட்டியாக, ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். மும்பை அணிக்கு வழக்கம் போல ரோஹித் சர்மா மற்றும் இசான் கிஷான் இருவரும் துவக்கம் தர வந்தார்கள்.

பெங்களூர் உடனான கடந்த ஆட்டம் போல் இல்லாமல் இந்த ஆட்டத்தில் இவர்களிடமிருந்து ஓரளவுக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. ரோஹித் சர்மாவை 21 ரன்னில் துஷார் தேஷ்பாண்டே கிளீன் போல்ட் செய்தார். இஷான் கிஷான் மற்றும் கேமரூன் கிரீன் இருவரையும் ஜடேஜா வழி அனுப்பி வைத்தார்.

இதற்கு நடுவில் சான்ட்னர் பந்துவீச்சை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் ஸ்வீப் ஆட முயல பந்து சின்ன எட்ஜ் ஆகி மகேந்திர சிங் தோனியின் கைகளில் சிக்கியது. நடுவரிடம் அவுட் அப்பில் கேட்ட பொழுது அவர் தரவில்லை. மகேந்திர சிங் தோனி உடனே மூன்றாவது நடுவரிடம் சென்றார். அவருக்கு பந்து கொஞ்சம் எட்ஜ் ஆனதும் ரொம்ப சரியாகவே தெரிந்திருந்தது. மூன்றாவது நடுவரின் முடிவில் சூரியகுமார் யாதவ் பரிதாபமாக வெளியேறினார்.

டிஆர்எஸ் விஷயத்தில் தோனி எப்பொழுதும் தவறுவதே கிடையாது. அவர் மூன்றாவது நடுவரிடம் சென்றால் அது பெரும்பாலும் அவுட் ஆகத்தான் இருக்கும். அவரது அந்தத் திறமையில் இன்றளவும் மாற்றம் இல்லை. ரசிகர்கள் இந்த டி ஆர் எஸ்-யை தோனி ரிவ்யூ சிஸ்டம் என்று சொல்வார்கள். அதற்கேற்றபடி இன்றும் அவரது கணிப்பு பொய்க்கவில்லை. இந்நிலையில் இக்காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

சென்னை பந்துவீச்சாளர்களின் அபாரமான செயல்பாட்டால் மும்பை அணியால் மீளவே முடியவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்களை மட்டுமே எடுத்தது. சிஎஸ்கே தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை