ஐபிஎல் 20232: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, May 02 2023 12:22 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. ஒரு மாதத்தை கடந்து விட்ட நிலையில், ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்களது முதல் பாதி போட்டிகளில் விளையாடி விட்டது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த ஐபிஎல் தொடரில் எந்த அணி பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

இந்த நிலையில் 44ஆவது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில்  முதல் இடத்தில் உள்ளது. அதேசமயம் டெல்லி அணி 8 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம்,அகமதாபாத்
  • நேரம் - இரவு 7.30

போட்டி முன்னோட்டம்

டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 6-இல் தோல்வி அடைந்துள்ளது. 2 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது டெல்லி.  டெல்லி அணியைப் பொறுத்தவரை பில் சால்ட் முந்தைய ஆட்டத்தில் அரை சதம் விளாசினார். டேவிட் வார்னர் இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடவில்லை. அவர் பழைய ஃபார்மில் இருந்தால் ஸ்கோரை அதிகம் அடிக்க முடியும்.

பந்துவீச்சில் அக்ஸர் படேல், இஷாந்த சர்மா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, குல்தீப் யாதவ் ஆகியோரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் முந்தைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் தோல்வியைத் தழுவியுள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மறுமுனையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 6-இல் வெற்றியும் 2-இல் தோல்வியும் அடைந்து 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. குஜராத் அணி வீரர்கள் பக்கா ஃபார்மில் உள்ளனர். சுப்மன் கில், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

கொல்கத்தாவிற்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் விஜய் சங்கர் அரை சதம் விளாசினார். அகமதாபாத் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வீரர்கள் அதிரடி காண்பிக்க வாய்ப்புள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை சிறந்த சுழற்பந்துவீச்சாளரான ரஷித் கான் உள்ளார். நூர் அகமதுவும் சிறப்பாக பந்துவீசி வருகிறார். இதனால், சுழற்பந்து வீச்சாளர்கள் குஜராத்துக்கு பலம். அதுமட்டுமல்லாமல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • குஜராத் டைட்டன்ஸ் - 02
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 00

உத்தேச லெவன் 

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்: டேவிட் வார்னர் (கே), பில் சால்ட், மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, பிரியம் கார்க், அக்ஷர் படேல், ரிப்பிள் படேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்கியா, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர் - பில் சால்ட்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், டேவிட் மில்லர், சுப்மான் கில்
  • ஆல்ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, ரஷித் கான், அன்ரிச் நோர்ட்ஜே

கேப்டன/துணைக்கேப்டன் - மிட்செல் மார்ஷ், பிலிப் சால்ட், ஷுப்மன் கில்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை