ஐபிஎல் 2023: வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரபாடா!

Updated: Thu, Apr 13 2023 22:46 IST
Image Source: Google

ஐபிஎல் 16 வது சீசனில் இன்று நடைபெற்று வரும்  18ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக மேத்யூ ஷர்ட் 36 ரன்கள், ஜித்தேஷ் சர்மா 25 ரன்கள், கடைசி கட்டத்தில் ஷாருக்கான் 9 பந்துகளில் 22 ரன்கள் என எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. மோகித் சர்மா நான்கு ஓவர்களுக்கு 18 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இதற்கடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில் மற்றும் சகா இருவரும் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். பஞ்சாப் வேகப்பந்துவீச்சாளர்களால் இவர்களுக்கு ஆரம்பத்தில் எந்தவித தொந்தரவையும் கொடுக்க முடியவில்லை. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்காக இந்த சீசனில் முதன் முறையாக களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க வேகப்ப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா, அதிரடியாக விளையாடி வந்த விருத்திமான் சஹாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ககிசோ ரபாடா கைப்பற்றிய இந்த விக்கெட் அவருக்கு ஐபிஎல் தொடரில் நூறாவது விக்கெட் ஆகும். இந்த விக்கெட் மூலம் அதிவேகமாக ஐபிஎல் தொடரில் 100 விக்கட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்திருக்கிறார். பெரும்பாலும் சுழல் பந்துவீச்சாளர்கள் ஆக்கிரமிக்கும் இந்தச் சாதனை பட்டியலில், டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஒரு வேகப்பந்துவீச்சாளர் முதல் இடத்தில் வந்திருப்பது மிகவும் ஆச்சரியமான விஷயம். 

குறைந்த போட்டிகளில் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்

  • 64 இன்னிங்ஸ் – ககிசோ ரபாடா
  • 70 இன்னிங்ஸ் – லசீத் மலிங்கா
  • 81 இன்னிங்ஸ் – புவனேஸ்வர் குமார்
  • 81 இன்னிங்ஸ் – ஹர்சல் படேல்
  • 83 இன்னிங்ஸ் – ரஷீத் கான்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை