ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Fri, Apr 14 2023 17:39 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நாளை சனிக்கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதன்படி மாலை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
  • இடம் - எம். சின்னசாமி மைதான, பெங்களூரு
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றியுடன் தொடரை தொடங்கினாலும், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் வெற்றியின் விழிம்பில் இருந்த ஆர்சிபி அணி கடைசி பந்தில் தோல்வியைத் தழுவியது. 

அதேசமயம் கேப்டன் டூ பிளெசிஸ், விராட் கோலி ஆகியோருடன் தற்போது மேக்ஸ்வெல்லும் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் வெய்ன் பார்னெல், டேவிட் வில்லி, முகமது சிராஜ் ஆகியோர் ரன்களை கட்டுப்படுத்தினாலும், ஹர்ஷல் படேல் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவது அந்த அணிக்கும் பெரும் பின்னடவை ஏற்படுத்தி வருகிரது. 

இந்நிலையில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வநிந்து ஹசரங்கா மீண்டும் அணியில் இணைந்துள்ளதால், அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனிலும் அவர் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்து இரண்டு தோல்விகளை ஆர்சிபி தழுவியுள்ளதால் மீண்டும் வெற்றிபாதைக்கு திரும்பவேண்டிய கட்டாயத்தில் அந்த அணி இப்போட்டியை எதிர்கொள்கிறது. 

அதேசமயம் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியளில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான கடைசி போட்டியில் அந்த அணி கடைசி பந்துவரை போராடி தோல்வியை சந்தித்ததால் ரசிகர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். 

இருப்பினும் அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரைத் தவிற மற்ற வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் அந்த அணியால் கடினமான இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தடுமாறி வருகிறது. இவர்களுடன் பிரித்வி ஷா, மனீஷ் பாண்டே, ரோவ்மன் பாவெல் ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி வெற்றிகளை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, முஸ்தபிசூர் ரஹ்மான், குல்தீப் யாதவ் ஆகியோருடன் அக்ஸர் படேல், ரோவ்மன் பாவெலும் இருப்பதால் நிச்சயம் எதிரணி பேட்டர்களுக்கு சவாலளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் -27
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 17
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10

உத்தேச லெவன்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், டேவிட் வில்லி/வநிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னெல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் - பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கே), மனிஷ் பாண்டே, யாஷ் துல், ரோவ்மன் பவல், லலித் யாதவ், அக்சர் படேல், அபிஷேக் போரல், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், டேவிட் வார்னர், பிரித்வி ஷா
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், அக்சர் படேல், மைக்கேல் பிரேஸ்வெல்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, முகமது சிராஜ், வெய்ன் பார்னெல்

கேப்டன்/துணைக்கேப்டன் - விராட் கோலி, டேவிட் வார்னர், ஃபாஃப் டு பிளெசிஸ், அக்சர் படேல்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை