ஐபிஎல் 2023: பூரன், ஸ்டோய்னிஸ் காட்டடி; பரபரப்பான ஆட்டத்தில் ஆர்சிபியை வீழ்த்தியது எல்எஸ்ஜி!

Updated: Mon, Apr 10 2023 23:41 IST
IPL 2023: Stoinis and Pooran put on a show to remember as Lucknow beat Bangalore in a last-ball thri (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்றை லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லக்னோ டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி களமிறங்கிய விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் இணை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தது. 44 பந்துகளில் 61 ரன்களை விளாசி அணிக்கு பக்கபலமாக திகழ்ந்த கோலியை அமித் மிஸ்ரா அவுட்டாக்கினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் ஃபாஃப் டு பிளெசிஸ் கைகோத்தார். இருவரும் லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 27 பந்துகளில் 50 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இதில் 17 ஓவரில் டு பிளெசிஸ் அடித்த பந்தை குருணால் பாண்டியா மிஸ் செய்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து 44 பந்துகளில் 100 ரன்கள் என இருவரின் பாட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் லக்னோ பவுலர்கள் திணறினர். அடித்து வெளுத்த மேக்ஸ்வெல்லை 19.5 ஓவரில் மார்க் வுட் அவுட்டாக்கினார். 29 பந்துகளில் 59 ரன்களை சேர்த்த மேக்ஸ்வெல், 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ஃபாப் டு பிளெசிஸ் 79 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லக்னோ அணி தரப்பில் அமித் மிஸ்ரா, மார்க் வுட் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து கடின் இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் விதமாக அதிரடி வீரர் கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே க்ளின் போல்டாமி ஏமாற்றமளித்தார். அடுத்து களமிறங்கிய தீபக் ஹூட 9 ரன்களிலும், குர்னால் பாண்டியா ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து வெய்ன் பார்னெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இதனால் லக்னோ அணி 23 ரன்களுகுள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசித்தள்ளினார். அதுவரை உற்சாகத்தில் இருந்த ஆர்சிபி ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்டோய்னிஸ் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். பின் 6 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 65 ரன்களைச் சேர்த்திருந்த ஸ்டோய்னிஸ் கரன் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அவரைத் தொடர்ந்து கேப்டன் கேல் ராகுலும் 18 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழந்து மீண்டும் ஏமாற்றமளித்தார். இதனால் ஆர்சிபி அணி இப்போட்டியை எளிதாக வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருந்த லக்னோ அணிக்கு மீண்டும் உயிர்கொடுத்தார். 

தொடர்ந்து சிச்கர் மழை பொழிந்த நிக்கோலஸ் பூரன் வெறும் 15 பந்துகளில் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து மிரட்டினார். இது நடப்பு ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக அரைசதமாகவும் அமைந்தது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிவேக அரைசதமாகவும் இது அமைந்தது. 

அதன்பின் நிக்கோலஸ் பூரன் 18 பந்துகளில் 4 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 62 ரன்களைச் சேர்த்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன்பின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆயூஷ் பதோனி சிக்சர் அடித்த வேகத்தில் தெரியாமல் பேட்டால் ஸ்டிக்கை அடித்தார். இதனால் அந்த பந்து டாட் பந்தாக மாறியதுடன், ஆயூஷ் பதோனியின் விக்கெட்டையும் பறித்தது. 

இறுதியில் லக்னோ அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆர்சிபி தரப்பில் அந்த ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் மார்க் வுட், ஜெய்தேவ் உனாத்கட்டின் விக்கெட்டை வீழ்த்தினாலும், ரன்களை கட்டுப்படுத்த தவறினார். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 19.5 ஓர்களில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை