ஐபிஎல் 2023: சஹால் மாயாஜாலம்; கேகேஆரை 149 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!

Updated: Thu, May 11 2023 21:20 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் கடுமையாக முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 56ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். அதன்படி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் - ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை களமிறங்கினர். 

இதில் ஜேசன் ராய் 10 ரன்களிலும், ரஹ்மனுல்லா குர்பாஸ் 18 ரன்களிலும் என டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - கேப்டன் நிதிஷ் ராணா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

ஒருகட்டத்திற்கு மேல் இருவரும் அதிரடி காட்ட தொடங்கினர். பின் 22 ரன்களை எடுத்திருந்த நிதீஷ் ரானா சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 10 ரன்களில் கேஎம் ஆசிஃபிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் கடந்த கையோடு 57 ரன்களில் சஹால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங், ஷர்துல் தாக்கூர் ஆகியோரும் அடுத்தடுத்து சஹால் பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சஹால் 4 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை