பவர்பிளேவிலே பாதி அணியை காலி செய்த மும்பை பந்துவீச்சாளர் - காணொளி!

Updated: Fri, May 03 2024 20:43 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் ரைன் தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் 5 ரன்கள் எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து அதிரடியாக தொடங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 2 சிக்ஸர்களுன் 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 6 ரன்களிலும் என நுவான் துஷாராவின் இரண்டாவது ஓவரிலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

அவர்களைத்தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங்கும் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் பியூஷ் சாவ்லாவின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் காரணமாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் 6 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

 

இதையடுத்து ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் மற்றும் இம்பேக்ட் வீரர் மனீஷ் பாண்டே ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். இதன் காரணமாக கேகேஆர் அணியும் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின் பவர்பிளே ஓவரிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்த காணொளி வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை