17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 51ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை.

Advertisement

ஏனெனில் அணியின் நட்சத்திர தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய அங்கிரிஷ் ரகுவன்ஷி 13 ரன்களிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களிலும் என அடுத்தடுத்து நுவான் துஷாராவின் இரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். அதனைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரம் சுனில் நரைன் ஒரு சிக்ஸருடன் 8 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மற்றொரு நட்சத்திர வீரர் ரிங்கு சிங்குவும் 9 ரன்களை மட்டுமே அடித்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

Advertisement

இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதல் 6.1 ஓவர்களில் 57 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து இணைந்த வெங்கடேஷ் ஐயர் - இம்பேக்ட் வீரர் மனீஷ் பாண்டே இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். அதுமட்டுமின்றி இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதத்தை நெருங்கிய மனீஷ் பாண்டே 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 42 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் 7 ரன்களுக்கும், ரமந்தீப் சிங் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும், இறுதிவரை களத்தில் இருந்த வெங்கடேஷ் ஐயர் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 70 ரன்களைச் சேர்த்தார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் தரப்பில் நுவான் துஷாரா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News