ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன்!

Updated: Thu, May 02 2024 13:44 IST
ஐபிஎல் 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ்- உத்தேச லெவன்! (Image Source: Google)

 

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான பிளே ஆஃப் சுற்றுக்காக ஒவ்வொரு அணிகளும் தீவிரமான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இத்தொடரில் இன்று நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சம பலம் வாய்ந்த இரண்டு அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் காண்போம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள 9 போட்டிகளில் 5 வெற்றி 4 தோல்விகள் கென 10 புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் டிராவிஸ் ஹெட், ஹென்ரிச் கிளசென், அபிஷேக் சர்மா, அப்துல் சமாத், நிதீஷ் ரெட்டி ஆகியோர் எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகின்றனர். அதேசமயம் ஐடன் மார்க்ரம் தொடர்ச்சியாக சோபிக்க தவறிவருவதால், இந்த போட்டியில் நியூசிலாந்து அதிரடி வீரர் கிளென் பிலீப்ஸ் இடம்பெற வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் அணியின் பந்துவீச்சு துறையை எடுத்துக்கொண்டால் தமிழக வீரர் நடராஜன் தொடர்ச்சியாக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு துணையாக பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். அவர்களுடன் நிதீஷ் ரெட்டி, ஷபாஸ் அஹ்மத், ஜெய்தேவ் உனாத்கட் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டுவருகின்றனர். இதனால் நிச்சயம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ராம்/கிளென் பிலீப்ஸ், ஹென்ரிச் கிளாசென், நிதிஷ் ரெட்டி, ஷாபாஸ் அகமது, அப்துல் சமத், பாட் கம்மின்ஸ் (கே), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனத்கட், நடராஜன்.

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் 8 வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளதுடன், 16 புள்ளிகளைப் பெற்று இந்த சீசனில் தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளது. இந்த சீசனில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் எனஅனைத்து துறையிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறந்து விளங்குகிறது.பேட்டிங்கில் டாப் ஆர்டர் விரைவிலேயே ஆட்டம் இழந்தால் நடுவரிசையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் ஆகியோர் ஆட்டத்தை அற்புதமாக முன்னெடுத்துச் செல்பவர்களாக திகழ்கின்றனர்.

இந்நிலையில், துருவ் ஜூரெலும் ஃபார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவர்,லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 52 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்திருந்தார். பந்து வீச்சை பொறுத்தவரையில் சுழற்பந்துவீச்சாளர் யுவேந்திர சாஹல் அனுபவம் வாய்ந்த வீரராக சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறார். அவருக்கு துணையாக டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா ஆகியோர் வேகப்பந்து வீச்சில் பலம் சேர்த்து வருகின்றனர்.இருப்பினும் ரவிச்சந்திர அஸ்வின் சோபிக்க தவறிவருவது அணிக்கு சற்று நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை