ஐபிஎல் 2024: மழையால் கைவிடப்பட்ட ஆட்டம்; பிளே ஆஃப் சுற்றில் ஹைதராபாத்!

Updated: Thu, May 16 2024 22:53 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில் மீதமுள்ள இரு இடங்களுக்கான போட்டி கடுமையாகியுள்ளது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்த இருந்தன. 

அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் 7.30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் இப்போட்டியின் டாஸ் நிகழ்வு தாமதமானது. அதன்பின் இப்போட்டியானது 8.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு, டாஸ் நிகழ்வாவது 8 மணிக்கு நடைபெற இருந்தது. 

ஆனால் அதன்பின்னரும் தொடர்ந்து மழை நீடித்த காரணத்தால் போட்டியானது தமதமானது. மேலும் தொடர்ந்து மழை நீடித்து வந்த காரணத்தால் சன்சரைஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது டாஸ் நிகழ்வின்றி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் ஐபிஎல் தொடர் வரலாற்றில் ஹைதராபாத்தில் நடைபெறும் லீக் போட்டியானது மழையால் முழுவதுமாக கைவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். 

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி மற்றும் ஒரு போட்டி முடிவில்லை என மொத்தம் 15 புள்ளிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது அணி எனும் பெருமையைப் பெற்றுள்ளது. மேற்கொண்டு அந்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் வெல்லும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை