முதல் ஓவரில் அதிக விக்கெட்டுகள்: தனித்துவ சாதனை படைத்த போல்ட்!

Updated: Mon, Apr 01 2024 22:31 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோரது பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

அதன்படி அணியின் டாப் ஆர்டர் வீரர்களான ரோஹித் சர்மா, நமன் தீர், டெவால்ட் ப்ரீவிஸ் ஆகியார் தாங்கள் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் குறிப்பாக மூவரது விக்கெட்டையும் வீழ்த்தியது வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் தான். அவர்களைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 16 ரன்களில் பெவிலியன் திரும்பிய, கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 34 ரன்களைச் சேர்த்தார். 

அவருக்கு துணையாக விளையாடிய திலக் வர்மாவும் 32 ரன்களில் ஆட்டமிழக்க, மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர் சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி ரஜாஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றி தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, ஐபிஎல் தொடர் வரலாற்றில் இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமாரின் சாதனையை டிரென்ட் போல்ட் சமன்செய்துள்ளார். 

அதன்படி புவனேஷ்வர் குமார் இதுவரை 25 விக்கெட்டுகளை முதல் ஓவரிலியே கைப்பற்றியுள்ள நிலையில், டிரென்ட் போல்ட்டும் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேசமயம் அதிவேகமாக இச்சாதனையை படைத்த வீரர் வரிசையில் போல்ட் 80 இன்னிங்ஸில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி முதலிடத்தைப் பிடித்துள்ளார். புவனேஷ்வர் குமார் 116 இன்னிங்ஸில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை