ஐபிஎல் 2025: ருதுராஜ் விளையாடுவது சந்தேகம்; மீண்டும் கேப்டனாகும் தோனி?

Updated: Fri, Apr 04 2025 22:23 IST
Image Source: Google

18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்தொடரில் நாளை நடைபெறும் 17ஆவது லீக் போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது அடுத்தடுத்த தோல்விக்களுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்கிறது. மறுபக்கம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை தோல்வியைத் தழுவாமல் புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு ஒரு மோசமான செய்தி மற்றும் அதனால் ஒரு நற்செய்தியும் உள்ளது. அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயமடைந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கெனவே சிஎஸ்கே அணி பேட்டர்கள் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், ஃபார்மில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டும் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக ஃபார்க்கப்படுகிறது. இதனால் இப்போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர் டெவான் கான்வே லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

மேற்கொண்டு ருதுராஜ் கெய்க்வாட் இப்போட்டியில் விளையாடாத பட்சத்தில் அணியின் கேப்டனாக யார் செயல்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றனர். ஒருவேளை தோனி மீண்டும் கேப்டனாக செயல்படும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு கூடுதல் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Also Read: Funding To Save Test Cricket

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பதிரானா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஸ்வின், டெவோன் கான்வே, கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் கரன், ஷேக் ரஷித், அன்ஷுல் கம்போஜ், முகேஷ் சௌத்ரி, தீபக் ஹூடா, குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோட்டி, ராமகிருஷ்ணன் கோஷ், ஸ்ரேயாஸ் கோபால், வான்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை