பயிற்சியை தொடங்கிய மயங்க் யாதவ்; பிசிசிஐ அனுமதிக்காக காத்திருப்பு!
இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ. 27 கோடிக்கு ஏலம் எடுத்ததுடன், அந்த நியின் கேப்டனாகவும் நியமித்துள்ளது. இதையடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி மார்ச் 24ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியகின. இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதாக பார்க்கப்பட்டது. முன்னதாக கடந்தாண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் மயங்க் யாதவ் அறிமுகமானார்.
அத்தொடரில் ரசிகர்களில் கவனத்தி ஈர்த்த அவர், தொடரின் இறுதியில் காயத்தை சந்தித்தார். அதன்பின் காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த மயங்க் யாதவ் தற்போது வரை முழு உடற்தகுதியை எட்டமுடியாமல் உள்ளார். இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடாமியில் சிகிச்சை மேற்கொண்டு வரும் மயங்க் யாதவ், தற்போது தன்னுடைய பந்துவீச்சு பயிற்சியை மேற்கொண்டு வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் காணொளி மூலம் பதிவுசெய்திருந்தார்.
இருப்பினும் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் மயங்க் யாதவ் விளையாடுவதற்கான அனுமதியை பிசிசிஐ வழங்குமா என்பது தற்போதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில் மயங்க் யாதவ் முழு உடற்தகுதியை எட்டாத நிலையில், அவர் நிச்சயம் ஐபிஎல் தொடரின் முதல் பாதியை தவறவிடுவார். இதனால் இன்னும் சில தினங்களில் மயங்க் யாதவ் தனது உடற்தகுதியை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே