பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 18ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சண்டிகரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்து வரும் நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயஸ் ஐயர் தலைமயிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸையும், இரண்டாவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸையும் விழ்த்திய கையோடு இப்போட்டிஐ எதிர்கொள்கிறது. சிறந்த ஃபார்மில் உள்ள அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்புடன் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது. அந்த அணியின் பலமாக பேட்டிங் யுனீட் உள்ளது.
ஏனெனில் பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர், பிரியான்ஸ் ஆர்யா, ஷஷாங் சிங், மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் என நட்ச்த்திர வீரர்கள் வரிசைக் கட்டி நிற்கின்றனர். அணியின் பந்துவீச்சு துறையை அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோருடன் லோக்கி ஃபெர்குசன், மார்கோ ஜான்சன் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அந்த அணியின் வெற்றியை தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்றாக இருக்கும்.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியன்ஸ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யன்ஷ் ஷெட்ஜ், மார்கோ ஜான்சன், லோக்கி ஃபெர்குசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல். இம்பாக்ட் வீரர் - நேஹால் வதேரா.
ராஜஸ்தான் ராயல்ஸ்
மறுபக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்திருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான வெற்றி அணிக்கு கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. மேற்கொண்டு காயம் காரனமாக கடந்த சில போட்டிகளாக இம்பேக்ட் பிளேயராக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் தற்சமயம் முழு உடற்தகுதியைப் பெற்றுள்ளதுடன் அணியின் கேப்டனாகவும் செயல்படவுள்ளது அணிக்கு கூடுதல் சாதகத்தை வழங்கும்.
அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மையர் உள்ளிட்டோர் ஃபார்முக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பந்துவீச்சை பொறுத்தமட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சர், வநிந்து ஹசரங்கா ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்திலும் மஹீஷ் தீக்ஷ்னா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்டோர் ரன்களை கட்டுபட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரியான் பராக், துருவ் ஜூரல், வனிந்து ஹசரங்க, ஷிம்ரோன் ஹெட்மியர், ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் சர்மா. இம்பாக்ட் பிளேயர் - குமார் கார்த்திகேயா.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 28
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 16
- பஞ்சாப் கிங்ஸ் – 12
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - பிரப்சிம்ரன் சிங், சஞ்சு சாம்சன் (கேப்டன்)
- பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (துணைக்கேப்டன்), நேஹால் வதேரா, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்க, ரியான் பராக், மார்கோ ஜான்சன்
- பந்து வீச்சாளர்கள்- ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷ்தீப் சிங்.