ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை தட்டி தூக்கிய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

Updated: Mon, Jun 13 2022 20:03 IST
Image Source: Google

2018 முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் போட்டிக்குரிய டிவி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பெற்றிருந்தது. இந்த உரிமம் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் 15-வது சீசனுடன் முடிவுக்கு வந்துவிட்டது. 

இதைத்தொடர்ந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான (2023-2027) ஐபிஎல் போட்டிக்குரிய தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமம் மற்றும் இணையவழி பயன்பாட்டுக்கான டிஜிட்டல் உரிமம் ஆகியவற்றுக்கான ஏலம் நேற்று தொடங்கியது. 

இதில் 10-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுவனங்கள் பங்கேற்றன. உரிமத்தைப் பெறுவதில் டிஸ்னி -ஸ்டார், சோனி நெட்வொர்க், ஜீ குழுமம், ரிலையன்ஸ் வியாகாம்18 ஆகிய நிறுவனங்களிடையே கடும் போட்டி இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்புக்கான உரிமை எந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனமும், ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரிலையன்ஸ் வியாகாம் நிறுவனமும் பெற்றுள்ளது.

தொலைகாட்சி உரிமம் 23,575 கோடி ரூபாய்க்கும், ஓடிடி உரிமம் 20,500 கோடி ரூபாய்க்கும் விற்பனை ஆகியுள்ளது. முதல் முறையாக இந்தியாவில் ஐபிஎல் தொடரை இரண்டு இந்திய நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை