அயர்லாந்து vs இந்தியா, மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Tue, Aug 22 2023 22:36 IST
Image Source: CricketNmore

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டு, ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. அயர்லாந்து அணி ஏற்கெனவே இத்தொடரை இழந்துள்ளதால், நாளைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - அயர்லாந்து vs இந்தியா
  • இடம் - டப்ளின்
  • நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

போட்டி முன்னோட்டம்

ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது. இதில் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங் ஆகியோர் பேட்டிங்கிலும், பும்ரா மற்றும் பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் பந்துவீச்சிலும் அசத்திவருகின்றனர். அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோர் சொதப்பியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, ஜித்தேஷ் சர்மா, முகேஷ் குமார், ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் அயர்லாந்து அணி இத்தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக கேப்டன் பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர் ஆகியோர் சோபிக்க தவறியதே அந்த அணி தோல்விக்கு மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இருப்பினும் ஆண்டி பால்பிர்னி, பேரி மெக்கர்த்தி, கர்டிஸ் காம்பெர், ஜார்ஜ் யங் போன்றோர் அதிரடியாக செயல்பட்டுவருவது அந்த அணிக்கு நம்பிக்கையளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 07
  • அயர்லாந்து - 00
  • இந்தியா - 07

உத்தேச லெவன்

இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா (கே), பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கே), ஆண்ட்ரூ பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, கிரேக் யங், ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன்
  • பேட்ஸ்மேன்கள்- ரிதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆண்ட்ரூ பால்பிர்னி, திலக் வர்மா
  • ஆல்ரவுண்டர் - கர்டிஸ் காம்பர்
  • பந்துவீச்சாளர்கள்- மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜஸ்பிரிட் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய்.

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை